Home உலகம் பேரிடரால் வலுவிழந்த இலங்கையை மீள கட்டியெழுப்ப கைகொடுக்கும் ஆப்பிள் நிறுவனம்!

பேரிடரால் வலுவிழந்த இலங்கையை மீள கட்டியெழுப்ப கைகொடுக்கும் ஆப்பிள் நிறுவனம்!

0

இயற்கையின் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு உதவிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தனது உத்தியோகபூர்வ X தள கணக்கில் பதிவிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

நிவாரணம்

இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகளால் 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாதிக்கப்பட்ட நாடுகளில் நிவாரணம் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு தேவையான பங்களிப்பை வழங்க ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version