கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தராக ஓய்வு நிலை பேராசிரியர்
சி.மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை துறைத்தலைவராக இருந்து ஓய்வுபேற்ற
பேராசிரியர் மௌனகுரு கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில்
பெரும்பங்காற்றிவர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.
ஆறாவது வேந்தராக
கூத்துக்கலை, நாடக கலைகளின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சென்றவர் என்ற
பெருமையினைக் கொண்டவராகவும் உள்ளார்.
அவரை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக ஜனாதிபதி அனுரகுமார
திசாநாயக்க நியமித்துள்ளார்.
பேராசிரியர் முதுகலைப் பட்டம் பெற்ற பின் 1967இலிருந்து 1968 வரை
வின்செண்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் மைக்கேல் கல்லூரியிலும்,
மட்டக்களப்பு இந்துக்கல்லூயிலும் ஆசிரியராக தமிழ் பயிற்றுவித்தார்.
அரச
ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968இல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969இல்
கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970இல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும்
ஆசிரியராகப் பணியாற்றினார்.
1972 முதல் 1976 வரை கொழும்பில் கல்வி அமைச்சின்
பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார்.
பல தளங்களில் பணியாற்றி
1977இல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார். யாழ்ப்பாணம்
உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
1981இல் பலாலி
ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய
மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார்.
1984 முதல் 1988 வரையும் யாழ்
பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989இலிருந்து 1991 வரை சிரேஷ்ட
விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
1992இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தினார்.
நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில்
துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக்
குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றினார்.
Source: https://tamilwin.com/article/appointment-sixth-chancellor-of-eastern-university-1790354337
