Home சினிமா ரிலீஸுக்கு முன்பே GOAT படம் லாபம் கொடுத்ததா? தயாரிப்பாளர் அர்ச்சனா கூறிய தகவல்

ரிலீஸுக்கு முன்பே GOAT படம் லாபம் கொடுத்ததா? தயாரிப்பாளர் அர்ச்சனா கூறிய தகவல்

0

GOAT

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் GOAT. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர் மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

நேற்று இப்படத்தின் ட்ரைலர் பிரமாண்டமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை youtubeல் 20 மில்லியன் பார்வையாளர்களை இந்த ட்ரைலர் பெற்றுள்ளது.

GOAT படம் லாபம் கொடுத்ததா?

இந்த நிலையில், நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் GOAT படம் லாபத்தை கொடுத்துள்ளதா எனக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, GOAT திரைப்படம் எங்களுக்கு லாபம் தான் என வெளிப்படையாக கூறியுள்ளார். இதன்மூலம் ரிலீஸுக்கு முன்பே லாபத்தை கொடுத்துள்ளது என தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version