Home இலங்கை சமூகம் அநுரவின் அமைச்சருக்குப் பெறுமதியான வீடு! நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா

அநுரவின் அமைச்சருக்குப் பெறுமதியான வீடு! நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா

0

அனுராதபுரம் நகரின் நடுவில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதி ஒருவர் 1.5 மில்லியன் ரூபாவுக்கு பதிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி ஒருவரால் இந்தப் பத்திரம் எழுதப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

வசந்த சமரசிங்க

இந்த உடைமை 1.5 மில்லியன் ரூபாவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான மதிப்பு 1.5 மில்லியனை விட அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க அடிக்கடி  இந்த வீட்டிற்கு வருவார் என்றும் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பிலான ஆவணங்களின் நகலை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தாயார் என்றும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version