Home சினிமா லோகேஷ் கனகராஜ் அழைத்தால், அதை தயங்காமல் செய்வேன்.. அர்ஜுன் தாஸ் ஓபன் டாக்!

லோகேஷ் கனகராஜ் அழைத்தால், அதை தயங்காமல் செய்வேன்.. அர்ஜுன் தாஸ் ஓபன் டாக்!

0

அர்ஜுன் தாஸ்

கைதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ்.

பின் அந்தகாரம், அநீதி, போர், ரசாவதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.

அதுமட்டுமின்றி, அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

தனி ஒருவன் 2 எப்போது? இயக்குநர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் வருத்தம்!

ஓபன் டாக்! 

இந்நிலையில், தற்போது அர்ஜுன் தாஸ் லோகேஷ் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” இப்போதைக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. மற்றபடி அது வேண்டும், இது வேண்டாம் என்று சிந்திக்கவில்லை. ஆனால், தற்போது லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் வில்லன் வேடத்தில் நடிப்பேன்.

எனக்கு கதை கூட அவர் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எனக்கான முகவரியைத் தந்தவர் அவர் என்பதால், அவர் சொல்வதை கேட்டு கண்ணை மூடி நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.       

    

NO COMMENTS

Exit mobile version