முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா திடீர் விஜயம்

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா, கந்தளாய் தள வைத்தியசாலைக்கு நேற்று (9) மாலை
திடீர் விஜயம் மேற்கொண்டார்.

வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரடியாகக் கண்டறிவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த விஜயத்தின்போது, கந்தளாய் தள வைத்தியசாலையின் மருந்துப் பற்றாக்குறையைத் தடுப்பதற்கான
முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

மருந்துத் தட்டுப்பாடு

அடுத்த ஆண்டுக்குத் தேவையான மருந்துகளை இந்த ஆண்டிலேயே இறக்குமதி செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா திடீர் விஜயம் | Arun Hemachandra Visit To The Kandalai Hospital

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய
மருந்துத் தட்டுப்பாட்டை முன்கூட்டியே தவிர்த்து, நோயாளிகளுக்குத் தடையற்ற மருந்து
விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் உடனடி நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார்.

மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை 

குறிப்பாக மருத்துவர்கள், தாதிமார்கள்
மற்றும் ஏனைய மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை சுகாதார சேவைகளில் பெரும் சவாலாக இருப்பதை
அவர் ஒப்புக்கொண்டார்.

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா திடீர் விஜயம் | Arun Hemachandra Visit To The Kandalai Hospital

இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படுவதன் மூலம் சுகாதார சேவைகளின் தரம்
மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயத்தின்போது கந்தளாய் தள வைத்தியசாலை அத்தியட்சகர் உதார குணத்திலக்க மற்றும் வைத்திய
அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்