Home இலங்கை குற்றம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது

0

பொலிஸ் தலைமையகத்தின் பயிலுநர்களை இணைத்துக்கொள்ளும் பிரிவின் (ஆட்சேர்ப்புப்
பிரிவு) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருநாகல், தோரயாயவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

2007 ஆம் ஆண்டு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பரீட்சைக்காக போலியான தகவல்களுடன்
கூடிய விண்ணப்பப் படிவத்தையும், போலியாகத் தயாரிக்கப்பட்ட பணக் கொடுப்பனவு
பற்றுச்சீட்டையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தமை தொடர்பிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட
விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version