Home இலங்கை சமூகம் செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவரும் சிறை செல்வார்கள்! நீதி அமைச்சர் ஹர்சன திட்டவட்டம்

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவரும் சிறை செல்வார்கள்! நீதி அமைச்சர் ஹர்சன திட்டவட்டம்

0

இஷாரா செவ்வந்தி உட்பட வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்
குழுவினருடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகளினால் இஷாரா செவ்வந்தி குழுவினர் மற்றும்
கெஹல்பத்தர பத்மே குழுவினர் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக்
கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தப் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்படுவார்கள்.இவர்கள் எவரும் தப்ப முடியாது.

அரசு நடவடிக்கை

சந்தேகநபர்கள் எங்கு மறைந்து இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்.
நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்கள் தண்டனையை
அனுபவித்தே தீர வேண்டும்.

எவருக்கும் மன்னிப்பு கிடையாது.

போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்தும், பாதாள உலகக் குழுவினரிடம் இருந்தும்
இந்த நாட்டை மீட்டெடுக்க எமது அரசு சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version