Home இலங்கை சமூகம் வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம் : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

0

முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவுகள், நாளை (30) ஆம் திகதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும 

ஆறு லட்சத்து 768 பயனாளிகளுக்காக, ரூ. 3004 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நிவாரணத் தொகை பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் ஜூலை 30 ஆம் திகதி முதல் அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து தங்களின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 29.07.2025

NO COMMENTS

Exit mobile version