Home இலங்கை குற்றம் யாழில் பெண் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

யாழில் பெண் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

0

யாழில் வீடான்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் கோப்பாய் பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஓய்வு பெற்ற கிராம அலுவலர் ஒருவரின் வீட்டில் 95 ஆயிரம் ரூபா மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பன திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது 

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

தொடர் விசாரணைகளிலும், பாதுகாப்புக் கமராப் பதிவுகளின் அடிப்படையிலும் இந்தச்
சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியல்

பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற
அட்டையைக் கொண்டு 20 ஆயிரம் ரூபாவை எடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை
விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது விளக்கமறியலில் வைக்க
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version