Home இலங்கை குற்றம் யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்: மூவர் சந்தேகத்தில் கைது!

0

யாழில்(Jaffna) ஊடகவியலாளர் த.பிரதீபனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ். அச்சுவேலியில் ஊடகவியலாளர் த.பிரதீபனின் இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் வீட்டில் இருந்த உடமைகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.

ஆரம்பகட்ட விசாரணை

இவ்வாறு தாக்குதல் நடத்திய குழுவினரை அழைத்து வந்து ஊடகவியலாளரின் வீட்டை அடையாளம் காட்டியவர் மற்றும் தாக்குதல் மேற்கொண்ட இருவர் என மூவர் அச்சுவேலிப் பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் தலைமையில், எதற்காக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட குழுவுக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து பணம் வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version