Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு

0

கிளிநொச்சி –  இரணைமடு சந்திக்கு அண்மித்த பகுதியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும்,  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர்  கைது 

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்று(06.07.2024) மாலை பயணித்த பேருந்தில் இருந்த இருவர் மீதே குறித்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், விரைந்து செயற்பட்ட கிளிநொச்சி பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/attack-on-two-passengers-in-bus-1720270496

NO COMMENTS

Exit mobile version