பல்வேறு நாடுகளில் செயற்படும் இணையக்குற்ற வலயங்களுக்கு இலங்கையர்களை கவர்ந்திழுக்கும் முயற்சிகளை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை மியன்மார் இணையக்குற்ற வலையமைப்பில் சிக்கிக் கொண்ட இலங்கையர்கள் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட கடினமான முயற்சிகளின் பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்வாறான குற்றவலயங்களுக்கு இலங்கையர்களை மீண்டும் வளைத்துப் பிடிக்கும் முயற்சிகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
எச்சரிக்கை
தற்போதைக்கு இலங்கையர்கள் 11 பேர் அவ்வாறான குற்றவலயங்களில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அத்துடன் தாய்லாந்து, காம்போடியா, லாவோஸ் , வியட்னாம் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக அண்மைக்காலமாக முகநூலில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை சார் வல்லுனர்களையும் குறித்த விளம்பரங்கள் மூலம் ஈர்த்தெடுக்க இணையக் குற்ற ஒருங்கிணைப்பாளர்கள் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வாறான சதி வலைகளில் சிக்கி ஏமாந்துவிட வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
