Home விளையாட்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் :அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் :அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

0

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி(australia cricket team) இலங்கையில்(sri lanka) சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட உள்ளநிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடருக்கான அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் காலி மைதானத்தில் நடைபெறுகிறது. 

அணித் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

அந்த அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் (Pat Cummins)இதில் விளையாடாத காரணத்தால் அவருக்கு பதிலாக அணியை ஸ்டீவ் ஸ்மித்(steve smith) வழிநடத்துகிறார்.

இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அதற்கு ஏற்ற வகையில் அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் அவுஸ்திரேலியா.இதில் மொத்தம் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

“இலங்கை சுற்றுப்பயணம் சவாலானது. அதை கருத்தில் கொண்டு அங்கு நிலவும் சூழலுக்கு ஏற்ப அணியை அறிவித்துள்ளோம். போட்டிக்கு முன்னதாக கள சூழலுக்கு ஏற்ப ஆடும் லெவனை அறிவிக்கும் வகையில் இந்த அணி உள்ளது” என அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

இரண்டு டெஸ்ட் – ஒரு ஒருநாள்போட்டி

அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரே ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29-ம் திகதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் பெப்ரவரி 6 அன்றும், ஒருநாள் போட்டி பெப்ரவரி 13 அன்றும் நடைபெறுகிறது.

அவுஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (அணித் தலைவர்), அபாட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், வெப்ஸ்டர் 

NO COMMENTS

Exit mobile version