அய்யனார் துணை
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த சீரியல் டாப் 5 கூறுங்கள் என்றால் அதில் ஒரு தொடரை ரசிகர்கள் முக்கியமாக கூறிவிடுவார்கள்.
வேறெந்த தொடர் விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் தான். இப்போது கதையில் குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் பணம் தர ஒன்றாக சேர்த்து மெக்கானிக் செட்டை வாங்க இருக்கிறார் பாண்டி.
ஆனால் அந்த பணத்தை பல்லவன் அம்மா எடுத்துவிடுவாரோ என்ற சந்தேகம் கடைசி எபிசோட் பார்த்த ரசிகர்களுக்கு உள்ளது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா…. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
புரொமோ
இந்த நிலையில் வரும் வாரத்திற்கான எபிசோட் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் பல்லவன் அம்மா தனது கணவரிடம் பேசுகிறார், இங்கே எதற்கு வந்தாய், நான் தான் போன் செய்கிறேன் என்றேனே என கூற அவர் பணம் எடுத்தியா என கேட்கிறார். பணம் எடுப்பது என ஈஸியா, நான் இங்கே பல்லவன் அம்மாவாக வந்துள்ளேன் என்கிறார்.
உடனே அவரது கணவர் மகன் பாசத்தில் பேசுகிறாயா என கேட்க, எப்போதோ விட்டுவிட்டு சென்ற மகன், 2 நாள் பழகினதில் பாசம் வந்துவிடுமா என கேட்க இவர்கள் பேசியதை நிலா கேட்டுவிடுகிறார்.
பல்லவன் அம்மா பாண்டி பணத்தை திருடுவதையும் கண்டுபிடித்துவிடுகிறார் நிலா. இதோ அய்யனார் துணை பரபரப்பு புரொமோ,
