Home சினிமா நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

நிச்சயதார்த்தம் நின்றுபோனது.. அதிர்ச்சியில் குடும்பம்.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்

0

அய்யனார் துணை

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. இந்த சீரியலில் கடந்த வாரம் தனது தம்பிகள் யாருக்கும் சொல்லாமல் தன் திருமணத்திற்காக பெண் பார்த்துவிட்டார் சேரன்.

நமக்கு திருமணம் நடந்தால்தான் தம்பிக்கு திருமணம் நடக்கும் என்கிற நிர்ப்பந்தத்தால், விவாகரத்து பெறவிருக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது குடும்பத்தில் உள்ள யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால், சேரனுக்கு பிடித்திருப்பதால் அனைவரும் சரி என கூறிவிட்டார்கள்.

பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன்? ட்ரோல் செய்யப்படும் தளபதி கச்சேரி

வரும் வாரம்

நிச்சயதார்த்தத்திற்காக அனைவரும் சேர்ந்து பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். ஆனால், அங்கு பெரும் அதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. இந்த திருமணம் வேண்டாம் என பெண் வீட்டார் புரோக்கரிடம் கூறிவிட்டனர். தனது கணவர் மீண்டும் தன்னுடன் வந்து வாழ விரும்புவதால், அந்த பெண் திருமணத்தை வேண்டாம் என கூறிவிட்டார்.

அனைத்தையும் ஏற்பாடு செய்யசொல்லிவிட்டு இப்படி செய்தால் என்ன நியாயம் என நிலா கோபத்துடன் கேட்கிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version