Home இலங்கை கல்வி ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

0

நாளையதினம் (05), ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூட தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை

இது தொடர்பில் இன்று ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளை (05) முதல் மீண்டும் வழமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இருப்பினும், ஹட்டன் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

Source: https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-holiday-1785846703

NO COMMENTS

Exit mobile version