மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன.
இது தொடர்பில் நேற்று ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், குறித்த பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
Source: https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813
