Home இலங்கை சமூகம் கொட்டித் தீர்க்கும் மழை! தென்னை மரத்தில் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்ட படையினர்

கொட்டித் தீர்க்கும் மழை! தென்னை மரத்தில் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்ட படையினர்

0

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் சிலரை இலங்கை விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலமாக மீட்டுள்ளனர். 

அனுராதபுரத்தில் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பின்னர் நேற்று (27) முதல் தென்னை மரத்தில் சிக்கித் தவித்த ஒருவர் இலங்கை விமானப் படையினரால் இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். 

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மக்கள் 

மேலும்,  பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டிய பாலத்தில் சிக்கித் தவித்த ஆறு பேரும் இவ்வாறு விமானப் படையினரால் பெல்-212 உலங்கு வானூர்தி மூலமாக பாதுகாப்பாக  மீட்கப்பட்டுள்ளனர். 

ஹிங்குரக்கொடவில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தின் எண். 7 உலங்கு வானூர்தி  படைப்பிரிவைச் சேர்ந்த உலங்கு வானூர்தி மீட்புப் பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version