Home இலங்கை குற்றம் டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அழைத்து வந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முதல் சந்தேகநபராக பெயரிடப்பட்ட துலான் மதுசங்க என்ற குற்றம் சாட்டப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்,

மேலும் அவருக்கு நீதிபதி அவருக்கு பயணத்தடையையும் விதித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு

கடந்த ஏப்ரல் மாதம் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

NO COMMENTS

Exit mobile version