பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட உணவகங்களில் எதிர்வரும் முதலாம் திகதி முதல்
லஞ்சீற் பயன்படுத்துவதை நிறுத்துவதென்று பருத்தித்துறை நகரசபையும்,
பருத்தித்துறை நகர வர்த்தகர்களும் இன்று(15) தீர்மானித்துள்ளனர்.
பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபை தவிசாளர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல்
தலமையில் நகர வர்தகர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டது.
உணவகங்களில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லை
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து உணவகங்களில் பொலித்தீன்
பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழையிலையை பயன்படுத்துவதெனவும்,
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் பயன்பாட்டை
முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் பொதிகட்ட லஞ்சீற்றுக்கு அனுமதி
இதேவேளை உணவகங்களில் உணவுப்பொதி கட்டுவதற்கு ஜனவரி முதலாம் திகதிவரை லஞ்சீற்றை
அனுமதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
