மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட பிரதேசம்
விவசாயத்திற்கு மாத்திரமின்றி கால்நடை வளப்பிற்கும் பெயர்போன இடமாகும்.
மேச்சல்தரை இன்மைக்கும் முகம்கொடுத்துக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட
கால்நடைகளைக் கொண்டு பெரும் பட்டி பட்டியாக தமது கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு
வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பண்ணையாளர்கள் ஒருபுறமிருக்கின்றார்கள்.
அதுபோல் தத்தமது வீட்டு வளவுகளிற்குள்ளும், கொட்டகைகள் அமைத்து தமது வீட்டுப் பிள்ளைகளைப்போல் தீனிபோட்டுக் கொண்டு கால்நடைவளர்ப்பிலும் அதிகளவு
பண்ணையாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈடுபட்டு வருவதைக் காணமுடிகின்றது.
கால்நடை வளர்ப்பு
மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப் பெருக்கினால்
விவசாயச் செய்கை மாத்திரமின்றி, கால்நடை வளர்ப்பும், வருடாந்தம் பெரிதும்
பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
இதனால் வருடாந்தம் மாவட்டத்திலுள்ள கால்நடை
வளர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களின் வாழ்வாதாரம் “சாண்ஏற முழம் சறுக்குவது”
போன்று காலத்திற்கு காலம் நலிவடைந்து வருவதாக கால்நடைவளர்ப்பில் ஈடுபட்டு தமது
வாழ்வாதாரத்திற்குப் போராடி வரும் பண்ணையார்கள் அங்கலாய்க்கின்றனர்.
You may like this…