Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்

0

மட்டக்களப்பு(Batticaloa) வாகரை கிருமிச்சை குளத்தில் மீன்பிடிக்க சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிருமிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான யசோதரன் புண்ணியராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வழமைபோல சம்பவதினமான (6) ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலையில் வீட்டில் இருந்து கிருமிச்சை குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

சடலம் மீட்பு

பகலாகியும் வீடு திரும்பாததையடுத்து அவரை உறவினர்கள் தேடிச் சென்ற போது அவர் காணாமல் போயுள்ளதுடன் குளத்தின் கரையில் அவருடைய தோணி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து இயந்திர படகு மூலம் கடற்படையினர் குளத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது நீரில் மூழ்கிய நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/batticaloa-fisherman-death-today-rescue-body-1720327286

NO COMMENTS

Exit mobile version