குரங்குகளிடம் இருந்து மக்களையும், கிராமங்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு காற்றழுத்த துப்பாக்கி(Air Gun)வழங்குமாறு செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் இன்று குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் நடைபெற்றன.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எமது ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் தற்போது வரை குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே உள்ளது.
பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை என்ற வகையில் குரங்குகளிடம் இருந்து மக்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பது எமது கடமையாக உள்ளது.
குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.
என்னை பொறுத்தவரை காற்றழுத்த துப்பாக்கிகளை(Air Gun) வழங்கினால் அதன் மூலம் குரங்குகளை துரத்தியடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….
