Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேகரிக்க வரும் நபர்கள் தொடர்பில் நன்கு ஆராய்ந்து அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிலர் மோசடி செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற உதவிகளை சேகரிக்கும் மக்களின் உண்மை நிலையை ஆராய்வது மிகவும் முக்கியம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸார் எச்சரிக்கை

உதவி வழங்கும் போது அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் அல்லது கிராம சேவை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் உதவியுடன் நிவாரணம் வழங்கப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உட்லர் தெரிவித்துள்ளார்.

வெளியாட்கள் சம்பந்தப்பட்ட நன்கொடையாளர்களிடம் கேட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version