Home உலகம் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்த சீன சிறுமி

0

சீனாவில் (China) 13 வயதான லீ முசி (Lei Muzi ) என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார்.

தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற பெருமையையும் குறித்த சிறுமி பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குறித்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

வரலாற்று சிறப்பு 

சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையில் பயிற்சி பெற்று வந்துள்ளார் லீ முசி அவருக்கு சீனாவின் ஜின் ஷான் (Jin Shan) என்ற பரத கலைஞர் பயிற்சி கொடுத்துள்ளார்.

பரதநாட்டியத்தை தான் நேசிப்பதாகவும் தன்னுடைய வாழ்வின் முக்கிய அங்கமாக பரதக்கலை மாறியுள்ளதாகவும் லீ தெரிவித்துள்ளார்.

அவருக்காக இசைக் கலைஞர்கள் சென்னையில் (Chennai)  இருந்து சீனா சென்றிருந்தனர் என்பதும் இந்த மாத இறுதியில் சென்னையில் அவர் நடனமாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version