கொழும்பு நீதிமன்றத்தில் நடாத்தப்பட்ட படுகொலை சம்பவத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதக கண்ணோட்டத்திலேயே பார்க்கும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அநுர அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்த வலியுறுத்தலை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகளும் விடுத்து வருகின்றன.
எனினும், கடந்த கால ஆட்சியாளர்களை போன்றே அநுர அரசாங்கத்திற்கும் பயங்கரவாதத் தடை சட்டம் ஒரு கவசமாக தேவைப்படுகின்றது.
எனவே, பயங்கரவாதத் தடை சட்டத்தை தொடர்ந்தும் தக்கவைத்து கொள்ள நீதிமன்ற படுகொலை விவகாரம் அநுர அரசாங்கத்திற்கு உதவும் என சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
