முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடுவருடன் கருத்து முரண்பட்டால்…! உதைபந்தாட்ட போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை

54 ஆண்டுகளின் பின் சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் புதிய அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

அதன்படி சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காகவே இவ்வாறு நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்

பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார்

நீல அட்டை காட்டப்படும்

1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் உதைபந்தாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும் என கூறப்படுகிறது.

நடுவருடன் கருத்து முரண்பட்டால்...! உதைபந்தாட்ட போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிமுறை | Blue Card Will Be Introduced By Fifa

உதைபந்தாட்ட போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தாலோ, நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டாலோ நீல அட்டை காட்டப்படும்

இதன்போது 10 நிமிடங்களுக்கு குறித்த வீரர்கள் மைதானத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன ஒலிம்பிக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

பலஸ்தீன ஒலிம்பிக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்

இதன்படி இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.

மேலும், சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் இதில் கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது நீல அட்டைச் சோதனைகள் விளையாட்டின் கீழ் மட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கால்பந்து சங்க வாரியத்தின் வருடாந்த கூட்டத்தில் இது விவாதிக்கப்படும் என்றும் பிபா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

2023 ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த கால்பந்தாட்ட நட்சத்திரங்கள்! முதலில் யார் தெரியுமா..!

2023 ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த கால்பந்தாட்ட நட்சத்திரங்கள்! முதலில் யார் தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்