Home இலங்கை சமூகம் யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம்!

யாழ். மயிலிட்டியில் 6 கடற்றொழிலாளர்களுடன் சென்ற படகு மாயம்!

0

யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் கடறடறொழிலுக்காக நான்கு நாள்களுக்கு
முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 கடற்றொழிலாளர்கள் கடந்த
ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.

படகு மாயம்

இவ்வாறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகு இன்று(24) அதிகாலை வரை கரை திரும்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version