யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து மூன்று
பிள்ளைகளின் தாய் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வசாவிளான் – சுதந்திரபுரம்
பகுதியைச் சேர்ந்த ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் அண்மைய நாட்களில் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
இந்நிலையில்
அவர் நேற்றிரவு (21) தூக்கத்துக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை அவரை
காணவில்லை.
அந்தவகையில் அவரை தேடியவேளை தோட்ட கிணற்றில் சடலமாக காணப்பட்டார்.
சடலமானது
மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
