Home இலங்கை சமூகம் மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

0

மட்டக்களப்பு வாகரை காவல்துறை பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று
நேற்று சனிக்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்தனர்.

 காயங்கேணி கடற்கரையில் சம்பவ தினமான நேற்று மாலை
சடலம் ஒன்று கிடப்பதை கண்டு கடற்றொழிலாளர்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர்

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் காவல்துறையினர் சகிதம் சென்ற
காவல்துறையினர் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version