Home இலங்கை குற்றம் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இல்லத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

0

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பில் பிரித்தானியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தான் பாதிக்கப்பட்டுமை தொடர்பில், நண்பர் மூலம் பிரித்தானிய பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.


இராஜதந்திர சிறப்புரிமை

இது தொடர்பில் தலையீடு செய்துள்ள பிரித்தானியா பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.

இராஜதந்திர சிறப்புரிமை காரணமாக பொலிஸார் அந்த வீட்டிற்குள் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source: https://tamilwin.com/article/boy-complain-sri-lankan-high-commission-in-london-1729993596

NO COMMENTS

Exit mobile version