Home அமெரிக்கா அமெரிக்காவில் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள 12 வயது இந்திய வம்சாவளி சிறுவன்

அமெரிக்காவில் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள 12 வயது இந்திய வம்சாவளி சிறுவன்

0

அமெரிக்காவில் (America) இந்திய வம்சாவளி சிறுவனான சுபோர்னோ பாரி (Suborno Bari) தனது 12 வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்து சாதனை படைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இப்போது, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

இரண்டு புத்தகங்கள்

அதிசயக் குழந்தையாக பார்க்கப்படும் இந்த அறிவு மிகுந்த சிறுவன், 4ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பிற்கும், பின்னர் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பிற்கும் சென்று தனது 12 வயதில் உயர்நிலை கல்வியை அசாதாரணமாக முடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் இவர் அமெரிக்காவின் Long Island பாடசாலையில் மிக இளம் வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்த மாணவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் Lynbrook பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://tamilwin.com/article/boy-of-indian-origin-who-made-a-record-in-america-1719088483

NO COMMENTS

Exit mobile version