Home இலங்கை சமூகம் பெயர் மாற்றம் செய்யப்பட்டும் ஆனையிறவு உப்பு

பெயர் மாற்றம் செய்யப்பட்டும் ஆனையிறவு உப்பு

0

யாழில் (Jaffna) அமைந்துள்ள ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை “ஆனையிறவு உப்பு” என பெயரிடப்பட்டு, நாட்டில் சந்தைப்படுத்தப்படும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) கேட்ட கேள்விக்கு இன்று (03.06.2025) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் வடக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனையிறவு உப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு முன்னர் ராஜ உப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனால், நாட்டில் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

சில காரணங்களுக்காக இந்த நாட்டில் தமிழ் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையிலேயே ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை “ஆனையிறவு உப்பு”என பெயரிடப்பட்டு நாட்டில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version