Home உலகம் வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறை

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 வருட சிறை

0

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த தண்டனையை அறிவித்துள்ளனர்.

தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டத்தை வழி நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜெய்ர் போல்சனாரோவுக்கு இராணுவ சதிப்புரட்சி செய்த குற்றத்திற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.    

இதனால் 70 வயதான தீவிர வலதுசாரி தலைவர் தனது மீதமுள்ள நாட்களை சிறையில் கழிக்க நேரிடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version