Home இலங்கை சமூகம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்! திலகநாதன் எம்.பி குற்றச்சாட்டு

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்! திலகநாதன் எம்.பி குற்றச்சாட்டு

0

வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல்
இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் ரூபா பணம் பெற்றோர் ஒருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய்
ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று (20.12.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் உள்ளதால் ஏழை மாணவர்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகியுள்ளது.

ஊழல் 

இந்த வடக்கு மாகாண கல்வி
சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல் தொடர்பாக நான் இங்கே தெரிவிக்க
விரும்புகின்றேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருந்த போது ஒரு ஏழைத் தாய் என்னை மறித்து சொன்னார்.

தனது மகள்
பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுக்
கொண்டிருப்பதாகவும் அந்த பாடசாலையில் புதிய வகுப்புக்கு உயர்தரம் ஆரம்பித்து
நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையும் இரசாயனவியல் பாடத்திற்கு
ஆசிரியர்களை நியமிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது எனக்கு
இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவர் சொன்னார் உயர்தர பரீட்சையானது ஒரு
போட்டி பரீட்சையாகும். சாதாரண ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம்
பாடசாலையாகும்.

அந்த பாடசாலையில் திறமையான ஏழை மாணவர்கள் பலர் கல்வி
கற்கின்றார்கள். அவர்கள் அந்த போட்டி பரீட்சையில் சித்தி அடையாமல் செய்வதற்காக
சில வசதி படைத்த பெற்றோர் பணம் கொடுத்துள்ளார்கள்.

இலஞ்சம்

வடக்கு மாகாண கல்வி
அமைச்சின் செயலாளருக்கு அதாவது பற்றிக்குக்கு 10 இலட்சம் ரூபா கொடுத்திருக்கின்றார். ஒரு மாணவியினுடைய தந்தை.

ஆகவே முதலாம் தவணைக்கு ஒரு போதும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்
வரமாட்டார் என்று.

அப்போது தான் நான் சிந்தித்தேன். கடந்த நான்கு, ஐந்து
மாதங்களாக பற்றிக் நிரஞ்சனிடம் இந்த பாடசாலையில் இரசாயனவியல்
பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதற்கு ஒரு மாற்றினையும் நான்
தெரிவித்திருந்தேன்.

செட்டிக்குளத்தில் இருக்கின்ற அல்ஹாமியா என்னும்
பாடசாலையில் ஒரே ஒரு மாணவர் தான் இருக்கின்றார். அங்கே ஒரு இரசாயனவியல்
ஆசிரியர் இருக்கின்றார்.

ஆனால் இந்த பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 75
மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அந்த பாடசாலைக்கு ஆசிரியரை நியமிக்காதற்குரிய
காரணம் அந்த ஏழைத் தாய் சொல்லிய அதே காரணத்தை என்னால் உறுதிப்படுத்த
முடிந்தது.

அது தொடர்பாக அந்த ஏழைத் தாய் கேட்டதற்கு இணங்க வவுனியா வலய கல்வி
பணிப்பாளரிடம் நான் தொலைபேசியில் கேட்டபோது, அவர் சொன்னார் கல்வி அமைச்சின்
செயலாளர் தான் அதை நியமிப்பது. அது அவருடைய கடமை என்றும் மிக விரைவில் அந்த
வெற்றிடம் நிரப்பப்படும் என்றும்.

ஆனால் நான் ஊகித்துக் கொண்டேன். முதலாவது
தவணை மிக விரைவில் அதாவது முடிவடைந்து விட்டது. நான் நினைக்கின்றேன். இரண்டாவது
தவணைக்கும் அந்த வசதி படைத்த மாணவியின் தந்தை ஒரு மில்லியன் ரூபாய்
வழங்கினால் இரண்டாவது தவணைக்கும் அங்கே ஆசிரியர் நியமிக்கப்பட மாட்டார்.

கோரிக்கை

ஆகவே
அதிகாரிகளே சிந்தியுங்கள்.

ஏழைகளின் செல்வம் கல்வி. பெண்களுக்கு பாதுகாப்பு கல்வி. வசதி படைத்தோரின்
அணிகலன் தான் கல்வி.

ஆகவே ஏழைகளின் செல்வத்தில் விளையாடாதீர்கள். எமது
அரசாங்கத்தில் தற்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இங்கே
இருக்கின்ற அரச அதிகாரிகளை விட திறமையான அறிவுள்ளவர்கள் தான்
இருக்கின்றார்கள்.

ஆகவே எமது ஜனாதிபதியின் உடைய எண்ணக் கருவை செயற்படுத்துவதற்கு ஒரு போதும்
நாங்கள் தயங்க மாட்டோம். ஏழை மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.

ஆகவே அன்பான அரச உத்தியோகத்தர்களே இவ்வளவு காலம் நீங்கள் தவறு
செய்திருந்தால் இன்றில் இருந்தாவது நீங்கள் திருந்தி இந்த நாட்டுக்கும்
எங்களுடைய சமுதாயத்திற்கும் ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெற்றுக்
கொள்கின்ற சம்பளத்திற்கும் நேர்மையாக கடமையாற்றுங்கள் என்று நான் இந்த
தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version