Home உலகம் தொழில் முனைவோருக்கான வாய்ப்பு : பிரித்தானியா – சுவிட்சர்லாந்தின் புதிய ஒப்பந்தம்

தொழில் முனைவோருக்கான வாய்ப்பு : பிரித்தானியா – சுவிட்சர்லாந்தின் புதிய ஒப்பந்தம்

0

பிரித்தானியா (United Kingdom) மற்றும் சுவிட்சர்லாந்திற்கு (Switzerland) இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் தகுதிபெற்ற தொழில்முனைவோர் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் படி 200 இற்கும் மேற்பட்ட தொழில்முறைகளில் வேலை செய்ய பிரித்தானிய பிரஜைகளின் தகுதிகளை சுவிட்சர்லாந்து அங்கீகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முறை அனுமதிகள் 

அத்தோடு, மூலம் வழக்கறிஞர்கள், பனிச்சறுக்கு பயிற்சியாளர்கள், ஆனஸ்தீசியா நிபுணர்கள் மற்றும் டிரைவிங் இன்ஸ்ட்ரக்டர்கள் போன்ற பல்வேறு துறைகளின் தொழில்முனைவோர் பயன்பெறுவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட குடிமக்கள் உரிமைகள் ஒப்பந்தத்திற்கு (Citizens’ Rights Agreement) மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது.

அப்போது, பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து குடியிருப்பாளர்கள் இடையே தொழில்முறை அனுமதிகள் வழங்கப்பட்டதுடன் அந்த ஒப்பந்தம் 2024 இறுதியில் காலாவதியாகியுள்ளது.

வணிக செயலாளர்

இது தொடர்பில் பிரித்தானிய வணிக செயலாளர் ஜோனத்தான் ரெனால்ட்ஸ் (Jonathan Reynolds) தெரிவிக்கையில், “சுவிட்சர்லாந்துடன் நாங்கள் உலகத் தரத்தில் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளோம்.

இதன்மூலம் பிரித்தானிய தொழில்முறை நிபுணர்களுக்கு வெளிநாடுகளில் வேலை செய்யும் அனுபவத்தை எளிதாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எதிர்மறை நிலைமைகள் அதிகரிக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் வணிக வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version