முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டெல்லியில் மீண்டும் பாரிய விவசாயிகள் போராட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

டெல்லியில் நாளை மறுதினம் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. 

அத்துடன், லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள விவசாயிகள் கோரவுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் 

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை தடை செய்யக்கோரி டெல்லி-அரியானா எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2021 டிசம்பர் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers protest new delhi india

ஆண்மையை நீக்க நடவடிக்கை : மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி!

ஆண்மையை நீக்க நடவடிக்கை : மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி!

இதனை தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு தடை செய்தது.

டெல்லி நோக்கி பேரணி

இந்த நிலையில், டெல்லியில் மற்றுமொரு பாரிய விவசாயிகள் போராட்டத்தை நடத்த சம்யுதா கிஷான் மோச்சா மற்றும் கிசான் மஸ்டோர் மோச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில் நாளை மறுதினம் (13) சுமார் 200 விவசாய அமைப்புகளை சேர்ந்த 15 முதல் 20 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக வர திட்டமிட்டுள்ளனர்.

farmers protest new delhi india

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள தபால் கட்டணங்கள்...!

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள தபால் கட்டணங்கள்…!

அத்துடன், 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனரக வாகனங்களில் டெல்லி-நொய்டா எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், உத்தரபிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு 

இதையடுத்து, விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

farmers protest new delhi india police force protection barriers

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை : மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை : மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மேலும், டெல்லிக்கு அருகே உத்தர பிரதேசத்தின் டிக்ரி எல்லையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை தடுக்க கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை 

போராட்டம் அறிவித்துள்ள விவசாய சங்கங்களுடன் மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், நித்யானந்த ராய், அர்ஜுன் முண்டா ஆகியோர் நாளை சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

farmers protest new delhi india police force protection barriers

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் விவசாயிகள் போராட்டம் நடைபெறாது எனவும், இல்லையேல் நாளை மறுதினம் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கும் மைத்திரி : அனுரவை தொடர்ந்து நகர்வு

வெளிநாட்டு பயணத்தை ஆரம்பிக்கும் மைத்திரி : அனுரவை தொடர்ந்து நகர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்