Home இலங்கை சமூகம் உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை : சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்

உகந்தைமலை முருகன் ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை : சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்

0

அம்பாறை(Ampara) மாவட்டம் உகந்தைமலை முருகன் ஆலய கடற்கரை சூழலில் உள்ள குன்றில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஆலய தீர்த்தக் கடற்கரையில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள குன்றிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு பௌத்த கொடியை பறக்க விடப்பட்டுள்ளமையும் கடுமையான எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

கதிர்காமம் போல் 

முன்னதாக உகந்தைமலையில் கோவில் தரப்பின் சார்பில்  முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு வைக்கப்பட்டது என்று அந்தப் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கதிர்காமம் போல் உகந்தை மலையையும் மாற்றுவதற்கு திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் இந்து மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version