மாத்தளையில் (Matale) போதைப்பொருளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை மாத்தளை அளவ்வ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அதே பிரதேச விஹாரை ஒன்றை சேர்ந்த 38 வயதான பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிக்குவுடன் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏழு நாள் தடுப்புக்காவலில்
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
