Home இலங்கை சமூகம் சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய ஒரு வசனம்! வியப்பு காட்டும் தேரர்..

சிங்களவர்கள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் கூறிய ஒரு வசனம்! வியப்பு காட்டும் தேரர்..

0

30 வருடங்களாக போரை நடத்திக்கொண்டு, தன்னுடைய தலைமைத்துவத்திலும் எவ்வித குறையும் வைக்காமல் செயற்பட்டவர் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என தெரிபே சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

தர்ம போதனையொன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

பிரபாகரன் சொன்ன அந்த வார்த்தை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விரும்பியோ விரும்பாவிட்டாலும் சிலரின் வார்த்தைகளில் வெளிவரும் ஒரு வசனம் தான் ‘சிங்கள மக்களின் ஞாபகம் ஒரு வாரம்தான்’ என்பது.   இதை நானும் கேட்டிருக்கிறேன். இது பிரபாகரன் சொல்லிப் பிரபலமான வார்த்தைகளாகும். 

முப்பது வருடங்களாக அவரின் தலைமைத்துவ செயற்பாட்டில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை. அது அவர்களின் தேசிய பற்றாகும். நான் கூறும் இவை சரியாகவோ பிழையாகவோ இருக்கலாம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரபாகரனை தமிழர்கள் தெய்வமாக போற்றுகின்றனர். ஏனென்றால் அவர் தமிழர்களின் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எங்கே ஒரு இடத்தில் இருந்த புத்தர் சிலையை கொண்டு வந்து வைத்து விட்டு பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

அத்தோடு பெயர் பலகையை கழற்றிவிட்டு மீண்டும் நாட்டுகின்றனர். இதெல்லாம் காட்டுமிராண்டித்தன செயற்பாடுகளாகும். தமிழ் மக்களுக்கு பிரபாகரன் மாவீரன், தெய்வமாகும். அதேபோன்று சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்த ஒரு சந்தர்ப்பம் இல்லை.

விகாரையில் விகாராதிபதி ஏதும் சொன்னால் ஆயிரம் காரணம் சொல்ல ஆட்கள் இருக்கின்றனர். அதனால் இதை பௌத்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version