Home இலங்கை சமூகம் வெலிமடை பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் படுகாயம்

வெலிமடை பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் படுகாயம்

0

வெலிமடை பிரதேசத்தில் சற்று முன்னர் நடைபெற்ற பேருந்து விபத்தொன்றில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர்.

பண்டாரவளையில் இருந்து வெலிமடை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று டயரப பிரதேசம் அருகே பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போதைக்கு 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, டயரப மீராவத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கவலைக்கிடமான நிலை

அவர்களில் 08 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்த காரணத்தினால் வெலிமடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில்ஈ பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version