Home இலங்கை சமூகம் நெடுஞ்சாலை நுழைவாயிலில் கைதான பேருந்து பயணி: வெளியான காரணம்

நெடுஞ்சாலை நுழைவாயிலில் கைதான பேருந்து பயணி: வெளியான காரணம்

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ நுழைவாயிலில் பேருந்தில் பயணித்த ஒருவர் போதைபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை இன்று (16) சோதனையிட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்போது, சந்தேகநபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருள் உட்பட 57 கிராம் புகையிலை, 7 கைத்தொலைபேசிகள், ஒரு சிறிய ரக கத்தி, நான்கு லைட்டர்கள், சாவிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டடுள்ளது.

கைது நடவடிக்கை

பதுளை கனுபலெல்ல போகஹெல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னதுவ காவல் நிலையத்தில் நீதி பரிபாலனம் தொடர்பில் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மக்களை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Source: https://ibctamil.com/article/bus-passenger-arrested-with-drugs-1718560731

NO COMMENTS

Exit mobile version