யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் முயற்சியினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், யாழ்ப்பாண பிரதான பேருந்து
நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி நிலையம் வரை அரச பேருந்து சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள்
மருத்துவக் கல்லூரி மாணவர்களின் நீண்டநாள் போக்குவரத்து பிரச்சினையை
தீர்க்கும் நோக்கில் இச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆரம்ப நிகழ்வில் மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாநகர சபை
உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




