Home இலங்கை பொருளாதாரம் பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி: அமைச்சரவை அளித்த அனுமதி

பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி: அமைச்சரவை அளித்த அனுமதி

0

இலங்கை சுங்கத்தினால் (Sri Lanka Customs) 5020 தொன் இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்தநிலையில், இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட குறித்த இஞ்சியை சலுகை விலையில் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஆயுர்வேத மருந்துகள்

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் (Sri Lanka Ayurvedic Corporation) உற்பத்தி செய்யப்படும் 87 வகையான மருந்துகளுக்கு மருத்துவ குணம் கொண்ட இஞ்சி ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது.

எனினும், சந்தையில் மருத்துவ குணம் கொண்ட இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version