எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) இலங்கை தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்படும்
ஹர்த்தால் போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் புதன்கிழமை(13) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஆதரவு வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று(11) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்தார்.
தமிழ் இளைஞன் படுகொலை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில இளைஞர்கள்
66-ஆம் பிரிவு இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் அந்த இடத்தில் அவர்கள்
கடுமையாக தாக்கப்பட்டதாகவும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் செய்தியில்
வந்திருந்தது.
அந்த செய்தியை பார்த்தபோது உடனடியாக நாங்களும் இது சம்பந்தமாக சர்வதேச
சமூகமும் அதே போன்று வெளிநாடு தூதுவர்கள் அனைவரிடமும் ஒரு அவசரமான ஒரு விடயமாக
பார்க்க வேண்டும் என்பதனை அறிவித்திருந்தோம். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்தையன் கட்டு குளத்தில்
இருந்து ஒரு இளைஞருடைய சடலம் மீட்கப்பட்டதாக செய்திகளில் அவதானிக்க கூடியதாக
இருந்தது.
இதில் ஒரு அபாயமான நிலை இராணுவத்தினால் தமிழ் இளைஞர்களை அடித்து கொலை செய்யும்
அளவிற்கு 2025 ஆம் ஆண்டிலும் இருக்கின்றது ஒரு பாரதூரமான ஒரு விடயம்.
இந்த பாரதூரமான விடயத்தை அதனோடு சேர்த்து இன்னும் பல விடயங்கள் இருக்கின்றது.
ஆனால் மிக முக்கியமாக இந்த பாரதூரமான விடயத்தை கண்டித்து இது சம்பந்தமாக உலக
நாடுகளுக்கு இதனைக் கொண்டு செல்லும் முகமாக எதிர்வரும் 15 ஆம் திகதி ஒரு ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு
விடுத்திருக்கின்றது. இந்த ஹர்த்தால் போராட்டத்தை வடக்கு கிழக்கு
பூராகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கான அழைப்புகள் நாங்கள்
விடுத்திருக்கின்றோம். அந்த அழைப்பிதழ் சம்பந்தமாக பேசுவதற்காக தான் இந்த ஊடக
சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.
உண்மையில் இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் ரவிகரன் ஊடாக அறியக்கூடிய தகவலாக இருந்தது. எதிர்மனசிங்கம்
கபில்ராஜ் என்பவர் 32 வயது அடைந்தவர் அவருக்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவர்கள் இந்த முல்லைத்தீவு மாவட்டத்திலே இராணுவ முகாமில் தாக்கப்பட்டதாக அந்த
பிரதேச மக்கள் எங்களுக்கு கூறியிருக்கின்றார்கள். இதிலே பல்வேறு செய்திகள்
வருகின்றது. அவர்கள் அந்த இடத்திற்கு ஏன் சென்றார்கள், எதற்கு சென்றார்கள்
என்றெல்லாம் நாங்கள் இவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இதன் அடிப்படை
பிரச்சினை என்ன என்றால் ஒரு தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட
சடலமாக ஒரு குளத்தில் அவர் மீட்கப்பட்டிருக்கின்றார். இதுதான் இதனுடைய
முக்கியமான ஒரு விடயம்.
ஒரு நாட்டினுடைய தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழர்களை 2025 ஆம் ஆண்டிலும் கூட இராணுவம் அடித்து கொல்லுகின்ற அளவிற்கு இருக்கின்றது என்றால் இந்த நாட்டிலே
தமிழ் மக்களுக்கு எந்த அளவு தூரம் பாதுகாப்பு இருப்பது என்பதை பற்றி மீண்டும்
நாங்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும். இது ஒரு சாதாரண விடயமாக சிலர் கடந்து
போகலாம். ஆனால் இது ஒரு சாதாரணமான விடயம் அல்ல. இதை போன்று இராணுவ முகாம்கள்
வடக்கு கிழக்கில் இருக்கின்றது. இதுபோன்று ஒரு சம்பவம் தென்னிலங்கையில்
எங்கேயாவது இடம் பெற்று இருக்கின்றதா? தென் இலங்கையில் நடந்திருந்தால் இன்று
அந்த பிரதேசங்கள் எல்லாம் காரிய அளவில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். ஏனென்றால் சிங்கள மக்களை சிங்கள இராணுவம் அடித்து கொன்றால் அவ்வாறு ஏற்படும்.
ஆனால் ஒரு தமிழ் இளைஞரை சிங்கள ராணுவம் அடித்து கொலை செய்யும் போது இந்த
விடயத்தை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் இனமும் மௌனமாக இருக்காமல் நாங்கள்
எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு இதில் குறிப்பாக வடமாகாணத்தில்
வன்னி மாவட்டத்தில் இருக்கின்ற மக்களும் சேர்ந்து தான் இந்த அரசாங்கத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உருவாக்கினார்கள். இந்த
அரசாங்கம் வந்ததன் பிற்பாடுதான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கின்றது. இதில்
சிலர் கூறலாம் இல்லை கடந்த அரசாங்கங்கள் போல் இல்லாமல் இராணுவ சிப்பாய்கள் கைது
செய்யப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் கைது செய்யப்பட்டது என்பதற்காக அந்த
இழந்த உயிரை நாம் மீண்டும் எடுக்க முடியாது. அந்த பிள்ளைகளுக்கு தன்னுடைய
தந்தை திருப்பி கிடைக்க மாட்டார். அந்த மனைவிக்கு தன்னுடைய கணவர் மீண்டும்
கிடைக்க மாட்டார்.
இன்று கபில்ராஜுக்கு நடந்த இந்த சம்பவம் நாளை சாணக்கியனுக்கும் நடைபெறலாம், இந்த மாவட்டத்தில் இருக்கும் எவருக்கும் நடக்கலாம், வடக்கு கிழக்கில்
இருக்கின்ற எந்த தமிழருக்கும் நடக்கலாம். இந்த விடயம் சம்பந்தமாக நாங்கள்
அலட்சியமாக இருப்போமானால் இது எதிர்வரும் காலங்களில் எங்களுடைய ஒட்டுமொத்த
தமிழ் இனத்தையும் தொடர்ந்தும் இராணுவ கெடுபிடியை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்
என்ற செய்தியை சொல்லுகின்ற விடயமாக இருக்கும்.
போராட்டத்திற்கு அழைப்பு
அந்த வகையிலே தான் தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சி வடக்கு கிழக்கில்
இருக்கின்ற பிரதானமான கட்சி என்ற அடிப்படையில் இந்த பொறுப்பை தமிழ் மக்களுடைய
சார்பிலே இலங்கை தமிழரசு கட்சி முன்னெடுக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கான
அழைப்பிதழை இலங்கை தமிழரசு கட்சியை விட்டு இருக்கின்றது. என்றால் அழைப்புகளை
விடுவதற்கான அந்த அங்கீகாரம் தமிழ் மக்கள் எங்களுக்குத் தான்
தந்திருக்கின்றார்கள். இந்த நேரத்தில் மௌனமாக தமிழ் மக்கள் சார்பிலே தமிழ்
மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்க முடியாது. அதற்காகத்தான் இந்த
ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருக்கின்றோம்.
இதேபோன்று எத்தனையோ பிரச்சனைகள் காணப்படுகின்றது. பலர் பேசுகின்றார்கள் 2025
ஆம் ஆண்டு தொழில்நுட்பம் இந்தளவு வளர்ந்த காலகட்டத்திலும் அனைவரிடமும் சமூக
வலைத்தளங்கள் இருக்கின்றது இவ்வாறான காலப்பகுதியில் .ராணுவம் பயம் இல்லாமல்
தாங்கள் தப்பி விடலாம் என்கின்ற நம்பிக்கையில் ஒரு தமிழ் இளைஞரை அடித்து கொலை
செய்வதற்கு துணிச்சலாக இருக்கின்றார்கள் என்றால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்
எவருமே இல்லாமல் சர்வதேச மேற்பார்வையும் இல்லை உள்நாட்டுக்குள்ளே வெளி
மாவட்டத்தினர் செல்ல முடியாது இணைய வசதி இல்லை தொலைபேசி வசதி இல்லை இவ்வாறான
காலகட்டத்தில் எத்தனையோ அநியாயங்களை செய்திருப்பார்கள்.
இதில் செம்மணி போன்ற எத்தனையோ புதைகுழிகள் சம்பந்தமான அகழ்வு பணிகள்
முன்னெடுக்கின்றார்கள். ஆனால் இந்த அகழ்வு பணிகளைப் பற்றி இதுவரைக்கும்
சர்வதேசத்தினுடைய உதவி தொழில்நுட்ப ரீதியான உதவியினை இந்த அரசாங்கம்
பெற்றுக்கொள்ள தவறி கடந்த மாதம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு
வருகை தந்த போது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எங்களுடைய தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவர் இந்த செம்மணி பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய
போது அந்த நாட்டில் இருக்கின்ற வெளியுறவுச் செயலாளர் ஒரு அறிக்கையை
விட்டிருந்தார். இலங்கை அரசாங்கம் கேட்டால் நாங்கள் இதற்கு தேவையான தொழில்நுட்ப
உதவிகளை டி என் ஏ பரிசோதனை செய்வதற்கு அல்லது இந்த அகழ்வு பணிகளில் வரும்
எலும்புக்கூடுகளை வைத்து டி என் ஏ பரிசோதனை செய்வதற்கு தேவையான உதவிகளை
தருவதற்கு நாங்கள் தயார் என கூறினார்கள். ஆனால் இந்த அரசாங்கம் அதனை
நிராகரிக்கின்றது.
அந்த விடயம் சம்பந்தமாக ஒரு வார்த்தை கூட இதுவரை இணக்கப்பாட்டை
தெரிவிக்கவில்லை.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற
உறுப்பினர்கள் வந்தபோது கூறியிருந்தார்கள். இந்த அரசாங்கத்தினுடைய நோக்கமும் இராணுவத்தினரை பாதுகாப்பது தான்.
ஆகவே இந்த விடயங்களைப் பற்றி நாங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏனென்றால்
இந்த ஒரு சகோதரர் கொல்லப்பட்டிருக்கின்றார் என்றால் இது நாங்கள் எவ்வாறு
பார்க்க வேண்டும் என்று சொன்னால் சிங்கள இராணுவம் தமிழர்களை இவ்வாறு கொல்லலாம்
என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் என்பதனை பார்க்கின்றோம்.
சாணக்கியன் பிரிவினைவாதம் பேசுகின்றார் என கூறலாம். இன்று இந்த இளைஞருக்கு
நடந்திருக்கின்றது இனிமேல் இராணுவமும் ஒரு தமிழ் இளைஞர் மீது கை வைக்க முதல்
அல்லது ஒரு இராணுவமும் தமிழ் இளைஞர் மீது கை வைத்தால் போராட்டங்கள் வெடிக்கும்
என்பதனை தெரிந்து இருக்க வேண்டும். ஏனென்றால் இந்த அரசாங்கம் வந்ததும் பின்னர்
நாங்களும் பொறுத்திருந்து பார்க்கின்றோம் ஏனென்றால் அரசாங்கம் மேடையில் சொன்ன
வாக்குறுதிகள் நாங்கள் ஆதரிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை உங்களுடைய
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரிக்கவும் இல்லை ஆனால் வடக்கு
கிழக்கில் ஒரு சிலர் ஆதரித்தார்கள். சரி ஆதரித்த மக்கள் தங்களை ஆதரித்து
இருக்கின்றார்கள் என்கின்ற அடிப்படையிலாவது அரசாங்கம் தமிழ் மக்களுக்கான சில
பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள்
பார்த்திருந்தோம். ஆனால் அவ்வாறான விடயங்களை செய்யப்போவது அல்ல.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரைக்கும் எதுவிதமான
முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில்
ஆவது உண்மை கண்டறியும் ஆணைக்குழு நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலக முடாக அதனை செய்யப் போகின்றோம் இதனை
செய்யப் போகின்றோம் என்றாவது கூறினார்கள்.
மைத்திரிபால சிறிசேன அவர்களின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான
அலுவலகமாவது உருவாக்கப்பட்டது. அந்த காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை
உருவாக்குவதற்கான சட்டத்தில் இருக்கின்றது சர்வதேச குற்றவியலை நாங்கள்
எடுக்கலாம் என சட்டத்தில் இருக்கின்றது. அண்மையில் ஹர்ஷன நாணயக்கார நீதி
அமைச்சர் கூறுகின்றார் இல்லை அது தேர்தல் அரசியல் அமைப்புக்கு முரணானது
நாங்கள் சர்வதேச உதவியை எடுக்க முடியாது என்று கூறுகின்றார் அவருக்கு தெரியாது
இந்த சட்டம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தில் இருக்கின்றது இவ்வாறான
விடயங்களை நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கம் செய்யும் என்று பார்த்துக் கொண்டு
இருக்க முடியாது.
அரசாங்கம் மாகாண சபை
தேர்தலை நடத்துவோம் என்று எத்தனையோ தடவைகள் பொய்யான வாக்குறுதிகளை
வழங்குகிறார்கள் சொல்வது முழுதும் பொய். அந்த பொய்யை சொல்வதற்கு ஜனாதிபதியே
அண்மையில் நாடாளுமன்றம் வந்து சொல்லுகின்றார். நாங்கள் பொய் சொல்வதாக இருந்தால் நாடாளுமன்றத்தில் சொல்லுவேன் உண்மை சொல்வதாக இருந்தால் புலனாய்வு பிரிவில்
விசாரணை செய்வேன் என கூறுகின்றார்.
இனிமேல் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஒருபோதும் உண்மை பேச மாட்டார். அவர்
புலனாய்வு பிரிவிடம் சென்று தான் தமிழ் மக்களுக்கான விடயங்களை சொல்லுவார் என
அவரே கூறுகின்றார் பாராளுமன்றத்தில் சொல்வதாக இருந்தால் பொய்யை தான் கூறுவேன்
என கூறுகின்றார். இவை எல்லாம் ஒரு ஜனாதிபதிக்கும் அழகு இல்லாத ஒரு விடயம்.
இந்த விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் எதிர்வரும் புதன்கிழமை காலையிலும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மட்டக்களப்புக்கு வருகை தருகின்றார். காலையில் 9:30 மணிக்கு
கச்சேரியில் கூட்டம் இருக்கின்றது. காலையில் 8.30 மணிக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி பூங்காவில் நாங்கள் ஒரு கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தினை நாங்கள் செய்ய போகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தின் இலங்கை
தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் ஒரு கவனியீர்ப்பை செய்ய இருக்கின்றோம்.
ஆனால் முக்கியமாக வெள்ளிக்கிழமை அன்று 15 ஆம் தேதி எல்லா மக்களும் இதற்கான
பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இன்று காலையில் பார்த்தேன்.இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ் ஜீவன் தொண்டமான் அந்த கட்சியினுடைய செயலாளர்கள் நாயகம்
தங்களுடைய பூரண ஆதரவினை இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு தருவதாக கூறி
இருக்கின்றார். மலையகத்தில் இருக்கும் நமது உறவுகள் இந்த மலையக உறவுகளின் தாய்
கட்சி தொழிலாளர் காங்கிரஸ் இந்த போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவை தருவது
உண்மையில் இந்த விடயத்தில் ஒரு வலு சேர்க்கும் விடயம்.
ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நின்று இந்த இராணுவத்தினுடைய அராஜகத்திற்கு எதிராக
நாங்கள் ஒன்றாக நிற்க வேண்டும்.இந்த ஒரு சம்பவத்தை மாத்திரம் குறிப்பிட்டு
சொல்லவில்லை. இது இராணுவம் வடக்கு,கிழக்கில் அதிகளவாக முல்லைத்தீவு மாவட்டத்தில்
நான் நினைக்கின்றேன் 11 நபர்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருப்பதாக கடந்த
காலத்தில் பேசப்பட்டது. அந்த அளவிற்கு இராணுவத்தை அங்கு வைத்திருந்து வடக்கு
கிழக்கு பிரதேசங்களில் ராணுவ முகங்களை வைத்திருந்து தொடர்ந்து தமிழ் மக்களை
அச்சுறுத்தும் வகையான செயல்பாடுகள் வடக்கு கிழக்கில் ராணுவத்தினரின்
எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என நாங்கள் கூறி இருக்கின்றோம் மக்களுக்கு
சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டும் என கூறி இருக்கின்றோம்.
சர்வதேச விசாரணை
ஆனால்
இதுவரைக்கும் அந்த விடயங்கள் நடைபெறவில்லை.
தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் சென்றால்
அடுத்த மாதம் அடுத்த மாதம் என்று முறக்கொட்டாஞ்சேனை, பாலையடிவெட்டை, காயங்கனி
குருக்கள்மடம் இந்த நான்கு இராணுவ முகாம்களை அகற்றுவது பற்றி ஒவ்வொரு கூட்டமும்
அடுத்த மாதம் என்று கூறுகிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம். இராணுவத்தை அதிகமாக வைத்திருந்து எமது மக்களை அச்சுறுத்தி மக்களுடைய அன்றாட
வாழ்க்கைக்கு தடையாக இருந்து கொண்டு அதே நேரத்தில் எமது இளைஞர்களை கொலை
செய்வதாக இருக்கின்றது என்று சொன்னால் இதற்கு மேல் நாங்கள் இதனை பார்த்து
மௌனமாக இருக்க முடியாது. அந்த வகையில் இதில் வடக்கு கிழக்கில் நாங்கள் இன மத
பேதமின்றி வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களுடைய
பாதுகாப்புக்காகவும் இந்த மக்களுக்கு எதிராக நடக்கும் விடயங்களுக்கு
எதிராகவும் நாங்கள் எங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் தேதி
ஒரு பூரண கருத்தாலை நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடைமுறைப்படுத்த
வேண்டும்.
நாங்கள் எப்போதும் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடும்போது அத்தியாவசியமான
சேவைகளுக்கு ஒருபோதும் தடையாக இருப்பவர்கள் அல்ல. அத்தியாவசியமான சேவைகள்
நிச்சயமாக நடைபெற வேண்டும். ஆனால் அதனை தவிர்த்து பூரணமான ஹர்த்தால் இதில்
வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள் அனைவருக்கும் சொல்லும் அறிவித்தல் என்ன
என்றால் இன்று இன்னொருவருக்கு ஒரு பிரச்சினை நடக்கும் போது நாங்கள்
பார்வையாளராக இருந்து அதற்கு ஆதரவு கொடுக்காவிட்டால் நாளைய தினம் எங்களுக்கு
அது நடக்கும்போது அவர்களும் பார்வையாளர்களாக இருப்பார்கள்.
நாங்கள் ஒன்றாக சேர வேண்டும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து இந்த கார்த்தாலே நாங்கள்
சரியான முறையிலே நடைமுறைப்படுத்தினால் தான் எங்களுடைய பலத்தை நாங்கள் காட்ட
முடியும்.
சகோதர இஸ்லாமிய மக்களது ஜனாஸா எரிப்பு நடந்தபோது அந்த மக்களுடைய நாடாளுமன்ற
உறுப்பினர்களில் ஒரு சிலர் மௌனமாக இருந்தபோது அந்த மக்களுக்காக நாங்கள் தான்
வீதியில் இறங்கி போராடினோம் அதேபோன்றுதான் நாங்கள் இரு சமூகங்களும் எல்லா
மக்களும் இன்னொருவருக்கு நடக்கும் போது நாங்கள் மௌனமாக இருந்தாள் நாளை இன்னொரு
சமூகத்தினுடைய அல்லது உங்களுக்கு ஒரு விடயம் நடக்கின்ற போது இன்னொருவரும்
மௌனமாக இருப்பார்கள். அந்த வகையில் இந்த போராட்டத்திற்கான பூரணமான ஆதரவினை
வடக்கு கிழக்கு வாழும் அனைத்து தமிழ் உறவுகளும் வழங்க வேண்டும் என்பதனை நான்
கேட்டுக் கொள்கின்றேன்.
01. தமிழரசு கட்சி தான் சர்வதேச விசாரணை வேண்டும் என்று முதலாவதாக கூறியதும்
இரண்டாவதாக கூறியதும் மூன்றாவதாக கூறியதும் அன்றும் சொன்னது நாங்கள் தான்
இன்றும் சொல்வது நாங்கள் தான் ஒரு சிலர் சர்வதேச விசாரணையில் அதாவது ஒரு சிலர்
என்று சொன்னால் ஒரு சில கட்சிகள் இந்த கேள்வியை நாங்கள் ஒன்றாக நின்று ஒரு
அரசுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய நேரத்திலே இந்த கேள்வியை
கேட்பதன் ஊடாக சில நேரங்களில் சில முரண்பாடுகள் வரலாம் ஆனால் அந்த
காரணங்களினால் நான் மற்றவர்களின் நிலைப்பாட்டை பற்றி கூறவில்லை.
சர்வதேச விசாரணை மீண்டும் என்பதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறுகின்றோம் அதில்
சில சட்ட ரீதியாக இருக்கின்ற நடைமுறை செய்யக்கூடிய விடயங்கள் நடைமுறைப்படுத்த
முடியாத விடயங்கள் எல்லாம் இலங்கை தமிழரசு கட்சியில் இருக்கின்ற சில
கருத்துக்களை வைத்துக்கொண்டு நாங்களும் சர்வதேச விசாரணைக்கு எதிரானவர்கள்
என்று சொல்லுகின்றார்கள் அது முற்று முழுதாக பொய்.
அன்றும் இன்றும் நாளைய தினமும் இந்த சர்வதேச விசாரணை நடத்தும் வரைக்கும்
சர்வதே செய்தியாக ஒரு நீதி கிடைக்கும் வரைக்கும் இந்த விடயத்தை கைவிடாமல்
பொறுப்பு கூறல் விடயத்தை தொடர்ந்து முன்னெடுப்பது இலங்கை தமிழரசு கட்சி தான்
நாங்கள் இந்த விடயத்தில் தொடர்ந்து முன்னெடுப்போம்.
எத்தனையோ நாடுகள் இருக்கின்றது 30, 40 ஆண்டுகளுக்கு பின்னரும் குற்றவாளிகள்
தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். நாங்கள் இப்போது 16 ஆண்டுகளை கடந்து
விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின் 16 ஆண்டுகளைக் கடந்திருக்கின்றோம். ஆனால் 16 ஆண்டுகள் கடந்தும் இந்த விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை
நாங்கள் தான் கூறுகின்றோம். ஒரு சிலர் அரசியல் இலாபங்களுக்காக மக்களுக்கு
பொய்களை சொல்லி அடைய முடியாத விடயங்களை சொல்லி ஏமாற்றி அதை தாங்கள் செய்ய
முடியாது என தெரிந்து அவர்களும் நாங்கள் கூறிய நிலைப்பாட்டுக்கு
வந்திருக்கின்றார்கள்.
அனைவரும் ஒன்றாக சேர்ந்து அரசுக்கு எதிராக இந்த அல்லது இந்த சம்பவத்துக்கு
எதிராக ஒரு போராட்டத்தை நடத்த யோசிக்கும்போது உள் கட்சி மற்றும் கட்சிகளுக்கு
இடையிலான இருக்கின்ற முரண்பாடுகளை தள்ளி வைத்து நாங்கள் இந்த போராட்டத்தை ஒரு
வெற்றிகரமாக முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
