முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணிலின் அழைப்பு

இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் தொடர்ச்சியாக
இணைந்துகொள்ளுமாறு அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க, அவுஸ்திரேலிய பேர்த் நகரில் வசிக்கும் அவுஸ்திரேலியா வாழ்
இலங்கையர்களை நேற்று (09.02.2024) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : ஒரே இடத்தில் கூடிய மகிந்த குடும்பம்

சனத் நிஷாந்தவிற்காக இரவில் நடத்தப்பட்ட பூஜை : ஒரே இடத்தில் கூடிய மகிந்த குடும்பம்

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல்

இதன்போதே மேற்படி அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது மற்றும் நவீனமயப்படுத்துவது
குறித்து புலம்பெயர் இலங்கையர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அவற்றுடன்
தொடர்ச்சியாக இணைந்துகொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையைக் கட்டியெழுப்ப அரசு ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தைப் பாராட்டிய
புலம்பெயர் இலங்கையர்கள், காலநிலை, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின்
அபிவிருத்திக்காக அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாகவும்
தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணிலின் அழைப்பு | Calling Sri Lankans Living In Australia

இதன்போது புலம்பெயர் இலங்கையர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி,

நாட்டின் முன்னேற்றத்துக்காக நீண்டகால கொள்கைத் திட்டங்களைச் செயற்படுத்த அரசு
அர்பணிப்புடன் செயற்படும் என்றும் கூறியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட புதிய கல்வி மறுசீரமைப்புத்
திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தெளிவூட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணிலின் அழைப்பு | Calling Sri Lankans Living In Australia

புலம்பெயர் இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை பேர்த் நகரில் ஆரம்பிக்க அரசு
தீர்மானித்திருக்கின்றது என்று இங்கு சுட்டிக்காட்டிய தேசிய பாதுகாப்பு
தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல
ரத்நாயக்க, இலங்கை புலம்பெயர் சமூகம் அதனூடாக அரசுடன் வலுவான முறையில்
தொடர்புகளைப் பேண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு வேலைத்திட்டம்

கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிர்வாக தீர்மானங்கள் தொடர்பான அறிக்கை உட்பட
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து
விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை
முன்னெடுப்பதற்குப் புலம்பெயர் இலங்கையர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் வழங்குமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியா வாழ் இலங்கையர்களுக்கு ரணிலின் அழைப்பு | Calling Sri Lankans Living In Australia

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களின்
ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அரசு ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டம்
குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் இங்கு விளக்கமளித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் தூதுவர்கள் சித்ராங்கனி வாகீஷ்வர,
நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன, மேற்கு அவுஸ்திரேலியாவின் இலங்கை
கொன்ஸூலர் ஜெனரல் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவு: ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றம்

உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவு: ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றம்

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்