Home உலகம் சர்வதேச மாணவர்களுக்கான வேலை: கனடா அரசின் அதிரடி நடவடிக்கை

சர்வதேச மாணவர்களுக்கான வேலை: கனடா அரசின் அதிரடி நடவடிக்கை

0

சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் பட்டபின் படிப்பு கற்கை நெறியின் அடிப்படையிலான வேலை அனுமதி (PGWP) தொடர்பான தகுதி நடைமுறை மாற்றப்பட்டுள்ளன.

குறித்த அறிவிப்பினை கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு (IRCC) வெளியிட்டுள்ளது.

பட்டப் பின்படிப்பு கற்கை நெறிகளை தொடரும் சர்வதேச மாணவர்களுக்கு இது வரையில் வழங்கப்பட்டு வந்த 178 கற்கை நெறித்துறைகள் நீக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு தேவை 

இதற்கு பதிலீடாக புதிதாக 119 புதிய கற்கை நெறிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சுகாதார பராமரிப்பு, சமூக சேவைகள், கல்வி மற்றும் தொழில்துறை (trades) போன்ற துறைகளை சேர்ந்த 119 புதிய பாடப்பிரிவுகள் இப்போது தகுதி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது நீண்டகால வேலைவாய்ப்பு தேவை இல்லாத துறைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version