கனடாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 33 இலட்சம் ரூபாவை மோசடி செய்த இருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாக்குறுதி வழங்கியதற்கமைய, வேலைகளை வழங்க தவறிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய மத்துகம சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அகலவத்தையை சேர்ந்த அமித் மஞ்சுள என்பவர் 13,70,000 ரூபாய் மோசடி செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடி
திரந்த கோசல திலகரத்ன என்பவர் 19,47,700 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்துகம சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் ஏ.எஸ். ரோஹணவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
