Home இந்தியா இந்தியாவை தொடர்ந்து சீண்டும் கனடா பிரதமர் ட்ரூடோ

இந்தியாவை தொடர்ந்து சீண்டும் கனடா பிரதமர் ட்ரூடோ

0

புதிய இணைப்பு

கனேடிய (Canada) மண்ணில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான உறுதியான ஆதாரத்தை இந்தியாவிடம் வழங்கவில்லை என்று கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள மத்திய தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணையில் புதன்கிழமை (16) சாட்சியமளிக்கும் போது ட்ரூடா இதனை வெளிப்படுத்தினார்.

நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான உளவுத்தகவலை மட்டுமே இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம். இந்தியாவின் தொடர்பிற்கான ஆதாரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ளவில்லை. நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது.

மோடி அரசுக்கு எதிரான கனடா நாட்டவர்களின் விவரங்கள், இந்தியாவிற்கு பகிரப்பட்டு, அந்த விவரங்கள் கிரிமினல் கும்பல்களுக்கு செல்கிறது. இது கனடா நாட்டவர்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதலாம் இணைப்பு

கனடாவில் (Canada) காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

இந்தியா (india) மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பொருளாதார தடை தொடர்பான விடயம் ஆலோசனை உள்ளது என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை

கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை.

அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார். 

இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா

இதேவேளை, கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் குறிவைத்து குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தியா கனடாவுக்கான தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால் கனடா அவர்களை வெளியேற்றியதாகக் கூறியுள்ளது.

Source: https://ibctamil.com/article/canada-to-impose-sanctions-on-india-1729086386

NO COMMENTS

Exit mobile version